ஸ்வாகதா ஒன்னும்..அவங்க வீட்டில் 4 பெண்கள்!! தயாரிப்பாளரின் சர்ச்சை பேச்சு..
பாடகி ஸ்வாகதா
பிரபல இசையமைப்பாளர் மீது பாடகி ஸ்வாகதா பாலியல் குற்றச்சாட்டு சொல்லி இருந்தது பெரிதாக பேசப்பட்டு வருகிறது. பாடகி ஸ்வாகதாவின் அந்த குற்றச்சாட்டுக்கு காரணமாக இசையமைப்பாளர் யார் என்று பலரும் கேட்டு வருகிறார்கள்.

7 வருடங்களுக்கு முன் நடந்த இந்த விஷயத்தை ஸ்வாகதா இப்போது வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதுகுறித்து பலரும் தங்களின் கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில் பிரபல தயாரிப்பாளரான பாலாஜி பிரபு ஒருசில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பாலாஜி பிரபு
பேட்டியொன்றில் பேசிய பாலாஜி பிரபு, இந்த சம்பவம் நடந்து 7 ஆண்டுகளாகியது என்றால், அதே நேரத்தில் ஏன் வெளிப்படுத்தவில்லை. குடும்பத்தில் ஆதரவு இருந்தபோதும் அல்லது போலிசில் புகாரளிக்க வாய்ப்பு இருந்தபோதிலும் அது செய்யப்படவில்லை என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.
அந்த நேரத்தில் புகாரளித்திருந்தால் விசாரணை நடைபெற்று, ஆதாரங்களும் கிடைத்திருக்கும். குற்றம் செய்தவர் தண்டனை அணுபவித்திருப்பார். ஸ்வாகதா லேசு பட்டவர் கிடையாது, அவங்க வீட்டில் 4 பெண்கள் இருக்கிறார்கள்.

அதிலும் பிக்பாஸ் மாயா தான் இவர் தங்கச்சி. மாயா என்றாலே எல்லோருக்கும் தெரியும். அவர் ரொம்ப தைரியமான பொண்ணு, அப்படிப்பட்ட ஒரு தைரியமான பொண்ணு இருக்கும் வீட்டில் இவர் உண்மையை வெளியே கொண்டு வராமல் விட்டதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
இப்போது அவர் பேசுவது சரிதான், ஸ்வாகதாவிற்கு பாதிப்பு ஏற்பட்டது உண்மையாக இருக்கலாம், ஆனால் அதே சமயம் அவரைப்பற்றி பேசியிருந்தால் மற்ற பெண்கள் பாதிக்கப்படாமல் இருந்திருப்பார்கள் என்று பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.