நமக்கு தேவை மாற்றமில்லை..அதுதான் தேவை!! நடிகை ஸ்வர்ணமால்யா ஓபன் டாக்..

Vijay Swarnamalya Tamil Nadu Election 2026
By Jai Apr 18, 2026 10:45 AM GMT
Report

ஸ்வர்ணமால்யா

நடிகர் விஜய், சினிமாவை விட்டு அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியலை தொடங்கியது முதல் பலரும் அவரை விமர்சித்தப்படி வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல நடிகையும் நடன கலைஞருமான ஸ்வர்ணமால்யா, விஜய் குறித்து மறைமுகமாக பேசி ஒரு வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நமக்கு தேவை மாற்றமில்லை..அதுதான் தேவை!! நடிகை ஸ்வர்ணமால்யா ஓபன் டாக்.. | Swarnamalya Reacts Video Goes Viral Politics

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பேசிய ஸ்வர்ணமால்யா, மரபு மாறிக்கொண்டே இருக்க வேண்டும், மறுக்கப்படக்கூடாது.

முன்னேற்றம்

இன்னும் சில நாட்களில் தமிழ்நாட்டின் வரலாற்றினை மீண்டும் எழுதுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்நேரத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கும், இளைஞர்களுக்கும் மாற்றம் தேவையெல்லாம், அது இல்லை.

மாற்றத்தை தேடி போனால் ஏமாற்றம் தான் வந்துவிடும். நமக்கு இருக்கும் முன்னேற்றத்தை பார்க்கையில் மாற்றம் தேவையில்லை. முன்னேற்றம் தான் தேவை.

சமூக நீதியை பின்பற்றக்கூடிய தமிழ் சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என்பது என் எண்ணம் என்று பேசியுள்ளார். அவர் பேசுவது விஜய்யை தாண் என்று பலரும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.