சிம்புவின் அப்பா டி ராஜேந்தருக்கு என்ன ஆச்சி? அப்பாவுடன் வெளிநாட்டுக்கு பறக்கும் எஸ்.டி.ஆர்
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு மேலாளர், பாடகர் என பன்முகத்திறமையை பெற்றிருப்பவர் டி ராஜேந்தர். 1980களில் இருந்து இவரின் சினிமா வாழ்க்கையில் பல வெற்றிகளை கொடுத்தவர்.
தன் மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தி அழகு பார்த்து வருகிறார். சமீபத்தில் பல பிரச்சனைகளை சந்தித்த டி ராஜேந்தரின் உடல் நிலை மோசமாக உள்ளதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நடிகர் சிம்பு தன் அப்பா டி ராஜேந்தர் உடல் நிலை குறித்த தகவலை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிக்கிச்சை பெற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டதால் உயர் சிகிச்சை தரவேண்டும் என்று மருத்துவரள் அறிவுறித்தியுள்ளனர்.
உடல் நலம் கருதி உயர் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். தற்போது சுய நினைவுடன் நலமாக உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
— Silambarasan TR (@SilambarasanTR_) May 24, 2022