மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிம்புவின் தந்தை டி. ராஜேந்தர்.. ஷாக்கிங் செய்தி
Silambarasan
T Rajendar
By Kathick
நடிகர் சிம்புவின் தந்தையும், தமிழ் சினிமாவில் பன்முக திறமையும் கொண்டவர் டி. ராஜேந்தர். இவருக்கு, தீடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக நான்கு நாட்கள் முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
நான்கு நாட்களுக்கு பின் இன்று டி. ராஜேந்தர், அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.ஆனாலும், மேல் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் சிம்பு தனது தந்தையை சிங்கப்பூருக்கு அழைத்து செல்லவிருப்பதாக தெரியவந்துள்ளது.
மேல் மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் டி. ராஜேந்தர் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வேண்டி வருகிறார்கள்.