டி ஆர் தூக்கி விட்ட நடிகர்? பல ஆண்டுகளாக காணாமல் போய்விட்டாரே..

t rajendar tamilactor actorganga
By Edward Apr 06, 2022 05:56 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வந்தவர் டி ராஜேந்தர். இவர் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் வாய்ப்பு பெற்று மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளனர்.

அப்படி உயிருள்ளவரை உஷா படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் கங்கா. அதே படத்தில் தான் நடிகை சரிதா, நளினியையும் அறிமுகம் செய்துள்ளார் டி ஆர் அவர்கள். மிகப்பெரிய ஹிட் கொடுத்த இப்படத்திற்கு பிறகு கங்கா அடுத்தடுத்த காதல் கதை படங்களில் நடித்து வந்தார்.

உயிருள்ளவரை உஷா படம் வெள்ளிவிழா கொண்டாடும் அளவிற்கு ஓடியதுடன் பாடல்களும் மிகப்பெரியளவில் பேசப்பட்டது.

அந்த காலக்கட்டத்தில் மோகனுக்கு அடுத்தபடியாக காதல் படங்கள் என்றாலே கங்கா தான் நடித்திருப்பார். அப்படிபட்ட நடிகை தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போயுள்ளார். என்ன செய்கிறார், எங்கு இருக்கிறார் என்ற விவரம் இன்று வரை தெரியவில்லை.