இதுகூட தெரியாதா? விக்ரம் பட இயக்குனரை கண்டபடி அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விக்ரம் நடிப்பில் சுமார் 3 ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகவில்லை. பல படங்கள் கொரோனாவால் தள்ளிப்போனது. சூழ்நிலை தற்போது சகஜமாகிவிட்ட நிலையில், விக்ரமின் மகான் படம் வெளியாகி கலவை விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கதில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துவிட்டது என்று இயக்குனர் அஜய் ஞானமுத்து டிவிட்டரில் நன்றி தெரிவித்திருந்தார்.
விக்ரம் சாருக்கும் என்னுடன் பயணித்த டீமுக்கும் நன்றி என்று கூறியிருந்தார். இதற்கு பலர் அவ்வளவு காசுபோட்டு தயாரித்த தயாரிப்பாளர் கண்ணுக்கு தெரியலையா என்று விமர்சித்தனர். மேலும், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா சமீபத்தில் இதுகுறித்து டிவிட் போட்டுள்ளார்.
அதில் பட்ஜெட்டை மிஞ்சிவிட்டீர்கள். தயாரிப்பாளரை மறந்துவிட்டீர்களே என்று விமர்சித்துள்ளார். இதற்கு அஜய், பட்ஜெட் அதிகமானதுக்கு நான் பொறுப்பல்ல. டீமென்று சொன்னது அனைவருக்கும் தான் என்று கூறியுள்ளார்.
மேலும் சிவா, விக்ரமை கூறினீர்கள் தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கூறி இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
@7screenstudio tk u ajay for ur reply. Whatever may be d rumours it can be discussed n Short out.Since u mentioned tks to chiyaan vikram u should mention producer name also. Hope u understand, accept n do it. Tk u all d best ?
— T Siva (@TSivaAmma) February 15, 2022