நடிகைகளுக்கு தகுந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை!! நடிகை தமன்னா ஓபன் டாக்..

Tamannaah Gossip Today Indian Actress Tamil Actress Actress
By Edward Apr 10, 2026 01:45 PM GMT
Report

தமன்னா

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகை தமன்னா தற்போது பாலிவுட் சினிமாவில் சென்ஷேசனல் நடிகையாக திகழ்ந்து வருகிறார். சினிமா, தொழில் என்று பிஸியாக இருந்து வரும் நடிகை தமன்னா, சினிமாவில் 21 ஆண்டுகளை கடந்திருக்கிறார்.

நடிகைகளுக்கு தகுந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை!! நடிகை தமன்னா ஓபன் டாக்.. | Tamannaah About Lack Opportunities For Actresses

டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமன்னா, 21 ஆண்டு அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

நடிகைகளுக்கு தகுந்த வாய்ப்புகள்

அதில் தமன்னா, தன்னுடைய அனைத்து படங்களும் ஒவ்வொன்றாக வெளியாக இருப்பதை நினைத்து உற்சாகத்துடன் இருப்பதாகவும் தான் சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகளாகிவிட்டாலும் ஒவ்வொரு முறையும் மீண்டும் புதிதாகத் தொடங்குவது போல உணர்வதாகவும் தெரிவித்தார்.

நடிகைகளுக்கு தகுந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை!! நடிகை தமன்னா ஓபன் டாக்.. | Tamannaah About Lack Opportunities For Actresses

ஆனால் பல நடிகைகளுக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பதில்லை. திரைத்துறையில் நடிகைகளுக்கு போதுவான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இருந்தாலும் தென்னிந்தியாவில் தனக்கு சிறப்பான வரவேற்பு இருப்பதாகவும் மக்கள் தனக்கு கொடுத்து வரும் அன்பை அவர்களுக்கு எவ்விதத்தில் திரும்பச் செலுத்தலாம் என்பதற்கான வழிகளை இடைவிடாமல் தேடிக் கொண்டிருப்பதாகவும் தமன்னா தெரிவித்துள்ளார்.