கொடுமை.. சகிக்க முடியல.. தமிழ் சினிமாவில் அது நடக்கிறது!.. நடிகை தமன்னா விளாசல்
தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை தமன்னா.
கடந்த மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார். தற்போது தமன்னா பாலிவுட்டில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட தமன்னா. தென்னிந்திய படங்களில் நடிக்காமல் இருப்பதை பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், தென்னிந்தியா படங்களில் கமற்சியல் விஷயத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சிலதிரைப்படத்தில் என்னுடைய ரோல் கதை உடன் பொருந்தாமல் இருந்துள்ளது. இந்த குறையை இயக்குநர்களிடத்தில் கூறினால் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
அதனால் இது போன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன்.
தென்னிந்திய மொழிகளில் ஹீரோவை சகிக்க முடியாத அளவுக்கு கொண்டாடும் கதை அம்சத்தில் இருக்கும். அந்த மாதிரியான படங்களில் நடிக்காமல் இருக்கலாம் என்று தமன்னா கூறியுள்ளார்.