60 வயது நடிகருக்காக 5 கோடி சம்பளமா!! கோபத்தில் நடிகை தமன்னா

Tamannaah Gossip Today Nandamuri Balakrishna
By Edward May 22, 2023 02:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தமன்னா தற்போது ஜெயிலர் படம் உட்பட பல படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்கள். இதற்கிடையில் தான் காதலித்து வரும் நடிகர் விஜய் வர்மாவுடன் அவுட்டிங் சென்று வருகிறார்.

இந்நிலையில் நடிகை தமன்னா கோபத்தில் திட்டி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதாவது இயக்குனர் அனில் ராவி புடி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட 5 கோடி சம்பளமாக கேட்டேன் என்றும் அவர்கள் கொடுக்க சம்மதிக்காததால் நடிக்க மாட்டேன் என்று கூறியதாகவும் செய்திகள் இணையத்தில் வெளியானது.

இதை கேள்விப்பட்ட தமன்னா, அனில் ராவி புடி இயக்கத்திலும் பாலகிருஷ்ணாவின் படத்திலும் நடிக்க ஆர்வமும் விருப்பமும் கொண்டுள்ளேன்.

அப்படி இருவரின் மீதும் மரியாதை இருக்கும் எனக்கு அவர்களின் படத்தில் அதிகமாக சம்பளம் கேட்டதாகவும் அதை தரவில்லை என்பதற்காக நடிக்க மறுத்து விட்டேன் என்றும் பொய்யான தவறான கட்டுக்கதைகள் வந்துள்ளன.

இது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தயவு செய்து இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று தமன்னா கூறியுள்ளார்.