ரசிகரிடம் அசிங்கப்பட்ட நடிகை தமன்னா.. வைரலாகும் வீடியோ.

Tamannaah Viral Video Bollywood Indian Actress Mumbai
By Jai Apr 20, 2026 11:30 AM GMT
Report

நடிகை தமன்னா

கேடி, வியாபாரி, கல்லூரி, பையா, அயன், படிக்காதவன், சுறா, சிறுத்தை போன்ற படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் நடிகை தமன்னா. இதனையடுத்து முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வந்தவர், தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக ஜொலித்து வருகிறார்.

நடிப்பை தாண்டி பிசினஸிலும் ஈடுபட்டு சம்பாதித்து வரும் தமன்னா தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்ட்டாகியுள்ளது.

ரசிகரிடம் அசிங்கப்பட்ட நடிகை தமன்னா.. வைரலாகும் வீடியோ. | Tamannaah Fan Moment Goes Viral Netizens React

அதாவது மும்பையில் பொது வெளிக்கு சென்ற அவருடன் ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது தன்னிடம் இருந்த பூக்களை தமன்னாவிடம் கொடுத்து போஸ் கொடுத்தார்.

வீடியோ

அந்த பூக்களை தமன்னாவிடம் கொடுத்துவிட்டு ரசிகர் சென்றுவிடுவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில், போட்டோ எடுத்தப்பின் அந்த பூக்களை தமன்னாவிடம் இருந்து அந்த நபர் வாங்கி சென்றுவிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தமன்னாவுக்கு இந்த அசிங்கம் தேவையா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.