இனிமே பேய் ஆட்டம் தான்!! தமன்னா, ராஷி கண்ணாவை இறக்கும் பிரபல இயக்குனர்..
2006ல் தமிழில் வெளியான கேடி படத்தில் அடக்கவுடக்கமான நடிகையாக அறிமுகமாகி தற்போது கவர்ச்சி குயினாக கலக்கி வருபவர் நடிகை தமன்னா. கேடி படத்தினை தொடர்ந்து தெலுங்கு, தமிழில் நடித்து வந்த தமன்னா, பாலிவுட் பக்கம் சென்று உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்தும் வந்தார்.
சமீபத்தில் காவாலா உள்ளிட்ட பாடல்களுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டும் படுமோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து வியப்பில் ஆழ்த்தி வருகிறார். நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருப்பதை அதிகாரப்பூர்வமாகவும் ஜோடிப்போட்டு போட்டோஷூட் எடுத்து வெளியிட்டார்.
இதன்பின், இந்தியில் உச்சக்கட்டமாக நடித்து வரும் நடிகை தமன்னா இயக்குனர் சுந்தர் சி இயக்கி வரும் அரண்மனை 4 படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அரண்மனை 4 படத்தில் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் உள்ளாடையுடன் நடிகை தமன்னாவும் நடிகை ராஷி கண்ணாவும் கவர்ச்சி ஆடையணிந்து போஸ் கொடுத்துள்ளனர்.
இருவரின் புகைப்படத்தை பார்த்து சுந்தர் சி பெரிய சம்பவத்தை செய்யப்போகிறார் என்றும் இனிமேல் பேய் ஆட்டம் தான் போல என்றும் ரசிகர்கள் இரு நடிகைகளை பார்த்து ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.




