முத்தக்காட்சிக்கு நோ..ஆனால் அந்த நடிகர்கூட மட்டும் தான்!! நடிகை தமன்னா ஓபன் டாக்..
தமன்னா
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டில் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை தமன்னா. சமீபத்தில் தன்னுடைய ஜுவல்லரி கடையை மும்பையில் தொடங்கி புது தொழிலிலும் சம்பாதித்து வருகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தா தொகுத்து வழங்கிய சாம் ஜாம் நிகழ்ச்சியில் தமன்னா கலந்து கொண்டு பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதில், முத்தக் காட்சியில் நடிக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் யாருடன் நடிப்பீர்கள் என்ற கேள்வியை சமந்தா கேட்டார்.

முத்தக்காட்சி
அதற்கு தமன்னா, விஜய் தேவரகொண்டாவுடன் என்று ஒரு நொடி கூட யோசிக்காமல் பதிலளித்துள்ளார். முத்தக் காட்சிகல் மற்றும் நெருக்கமான படுக்கையறை காட்சிகளில் மட்டும் நடிக்க மாட்டேன் என்ற முடிவில் இருந்ததையும் பகிர்ந்திருந்தார் தமன்னா.
இதனையடுத்து தமன்னா பல நடிகர்களுடன் நெருக்கமான மற்றும் முத்தக் காட்சிகளில் நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.