தமன்னாவின் நடவடிக்கையில் தவறு.. கோடிகளை சரிகட்ட பிரபல தொலைக்காட்சி எடுத்த முடிவு...

Tamilactress Tamannah Master chief
By Edward Oct 29, 2021 12:30 PM GMT
Report

தொலைக்காட்சி சேனல்கள் தங்களின் டி ஆர் பியை அதிகரிக்க பல நிகழ்ச்சிகள் சீரியல்களை அறிமுகப்படுத்தி வரும் அப்படி பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவியின் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சியின் தெலுங்கி வெர்சனில் நடிகை தமன்னா தொகுத்து வழங்கி வந்தார். நட்சத்திரங்களை வைத்து நிகழ்ச்சியை ஒளிப்பரப்பு செய்தால் அதிக பார்வையாளர்கள் பெரும் என்பதால் நடிகர் நடிகைகளை தேர்வு செய்கிறார்கள்.

இந்நிலையில், நடிகை தமன்னா வெறும் 18 நாட்கள் கால்ஷீட்டுக்காக 2 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார். அதில் 16 நாட்கள் வெற்றிகரமாக ஷூட்டிங்கும் முடித்துவிட்டாராம். ஆனால் மீதம் உள்ள இரண்டு நாட்களுக்கு ஷூட்டிங்கிற்கு வரவில்லையாம்.

மீதமுள்ள காட்சிகளை முடித்து தருமாறு தமன்னாவிடம் மாஸ்டர் செஃப் தயாரிப்பாளர் பலமுறை கேட்டும் தமன்னாவிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. தமன்னாவின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த மாஸ்டர் செஃப் குழுவினர், தமன்னாவுக்கு பதிலாக வேறு நடிகையை களமிறக்க திட்டமிட்டுள்ளனர்.

அதேசமயம் தமன்னாவுக்கு அந்த குழுவினர் ரூபாய் ஒரு கோடியே 50 லட்சத்தை சம்பளமாக வழங்கிவிட்டனர். மீதி இரண்டு நாட்கள் ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்துவிட்டு பாக்கியுள்ள தொகையை பெற்றுக் கொள்ளுமாறும் கூறியிருக்கின்றனர்.

இதனால் அந்த தொலைக்காட்சிக்கு 5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். அதனால் தமன்னா மீது வழக்கு போட்டுள்ளது.

Gallery