ரஜினி செய்த செயல்!! ஆசை நிறைவேறாமல் இறந்த கமலின் வில்லன் நடிகர்..
தமிழ் சினிமாவில் 1987ல் வெளியான நாயகன் படத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கு வில்லனாக நடித்து பிரபலமானார் பிரதீப் சக்தி. இதற்கு முன் அபூர்வ ராகங்களில் ரஜினி காந்த் அறிமுகமாகிய அடுத்த ஆண்டு அவர் ஒரு தொடர்கதை படத்தில் பிரதீப் சக்தி அறிமுகமாகினார்.
அதன்பின் வில்லன் கதாபாத்திரத்திகென்ற உடல்வாகு இருந்ததால் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். சில காரணங்களால் நிரந்தர வேலைக்காக 1993ல் அமெரிக்காவுக்கு சென்று அங்கேயே செட்டிலாகிவிட்டார். நியூயார்க் நகரில் பாபா ஹட் என்ற தாபா ஒன்றினை ஆரம்பித்து அதன்மீது கவனம் செலுத்தி வந்தார்.
சில சமயங்களில் 2015 வரை நடித்து வந்த பிரதீப் சக்தி 2016 அவரது 61 வயதில் மரணமடைந்தார். நடிகர் பிரதீப் சக்திக்கு முழுநேர நடிகராக வேண்டும் என்ற கனவும் இருந்துள்ளது. மேலும் ரஜினி அமெரிக்கா வந்தால் ஒருமுறை அவரது தாபாவுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளாராம்.
அதன்படி ரஜினியும் அங்கு சென்று பார்த்திருக்கிறார். இந்தியா திரும்புவேன் என்று அவரது உறவினர்களிடம் கூறியிருந்தாராம். ஆனால் அந்த ஆசை அவருக்கு நிறைவேறாமல் போயுள்ளது.