சூப்பர் ஸ்டார் நடிகர்களை மிரட்டி பணம் சம்பாதிக்கும் தயாரிப்பு நிறுவனம்! உண்மையை உடைத்த காவல் அதிகாரி..
தமிழ் சினிமாவில் தற்போது திரைப்படம் மட்டமானதாகவும் கதைகளம் சரியில்லாமல் இயக்குனர்கள் முன்னணி நடிகர்கள் படத்தைகூட மோசமாக எடுத்து வருவதாகவும் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அப்படி சிறந்த கதையாக இருக்கும் படங்களுக்கு பிரச்சனைகளும் எதிர்ப்புகளும் தான் வருகிறது.
இதனால் தயாரிப்பு நிருவனங்கள் பெரிதாக பாதிப்பு அடைந்து சினிமாவே வேண்டாம் என ஒதுங்கும் நிலையில் தள்ளப்பட்டு வருகிறது. இந்த லீஸ்ட்டில் ஏவிஎம் நிறுவனம் ஒதுங்கி இருக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.
இதுகுறித்து வழக்கறிஞரும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியுமான வரதராஜ் உண்மையை உடைத்து பேசியது வைரலாகி வருகிறது. முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் எல்லாம் சன் நிறுவனம் தாயரித்தும், வெளியாகும் படங்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
அப்படி வெளியிடும் திரைப்படங்களை குறைந்த விலைக்கு வாங்கி அதிகம் காசு புரட்டி வருகிறார்கள். மேலும் பல தியேட்டர்களை நிர்வகிக்கும் அரசியல் வாதிகளும் கார்ப்பரெட் நிறுவனங்களும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கி வருவதாகவும் இதன் மூலம் படத்தின் தயாரிப்பாளர்கள் லாபம் பார்க்க முடியாமல் தவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் சன் பிச்சர் நிறுவனம் தயாரிக்கும் முன்னணி நடிகர்களின் படத்தின் தோல்வி ஏற்பட்ட அவர்களை மிரட்டி அடுத்த படத்தில் நடித்து கொடுக்கவும் வைக்கிறார்கள்.
இந்த நிலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திற்கு ஏற்பட்டுள்ளது. படம் நஷ்டத்தை காரணம் காட்டி தான் ரஜினிகாந்தை மிரட்டி, அடுத்த நெல்சன் படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.
இதே நிலை நடிகர் விஜய்க்கும் வந்தால் அதை அவர் ஒதுக்கி விட வேண்டும் என்றும் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு இப்படியொரு நிலையா என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.