மதுப்பிரியர்கள் ஏமாந்துடாதீங்க.. கடைக்காரர் செய்த அட்ராசிட்டி
Tamilnadu
Tasmac
Juicemac
By Parthiban.A
தமிழ்நாட்டில் மதுபிரியர்களின் ஒரே புகலிடம் டாஸ்மாக். உள்நாட்டு மதுபானம் தொடங்கி வெளிநாட்டு மதுவகைகள் அனைத்தும் அங்கு விற்கப்படுகிறது. மற்ற எல்லா கடைகளிலும் ஈ மொய்த்துகொண்டிருந்தால், டாஸ்மாக் கடை மட்டும் மூடப்படும் வரை கூட்டம் நிரம்பி வழியும்.
இப்படி குடிமகன்கள் அதிகம் செல்லும் டாஸ்மாக் கடையின் போர்டை போல தற்போது கும்பகோணத்தில் உள்ள ஜூஸ் கடைக்காரர் ஒருவர் ஜூஸ்மாக் என பெயர் வைத்து கடை திறந்திருக்கிறார்.
அந்த கடை board தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வழியாக செல்லும் மதுபிரியர்கள் போர்டை பார்த்து ஏமாந்து விடாதீங்க.