இத்தனை கோடி போச்சே! என்ன ஆனாலும் சரி டாஸ்மாக் தெறந்தே ஆகனு!

tasmac chennairains
By Edward Nov 12, 2021 09:30 AM GMT
Report

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வெள்ள ஆறாக காட்சியளித்து வருகிறது. வணிகவளாகம், கடைகள், வீடுகள், ஐடி நிறுவனங்கள் போன்ற இடங்களில் மழை நீர் இருப்பதால் மூடி வைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் சென்னையில் உள்ள டாஸ்மாக் பகுதிகளிலும் தண்ணீர் புகுந்துள்ளதாக் சுமார் 40 இடங்களில் இருக்கும் கடைகள் மூடப்பட்டுள்ளது. கிண்டி, அடையாறு, தி நகர், சைதாப்பேட்டை, நுங்கப்பாக்கம், வேளச்சேரி, தேனாம்பேட்டை போன்ற இடங்களில் இருக்கும் கடைகளும் மூடியுள்ளன.

இதனால், மது விற்பனை குறைந்துள்ளது. மது பிரியர்களால் மதுகுடிக்காமல் இருக்கையில் பாதி வருமானம் குறைந்துள்ளது என்று அந்த இடங்களில் பணிபுரிந்த டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகின்றனர்.