நித்யா ஊர் சுத்துகிறாள்..மகள் போஷிக்கா வாழ்க்கையை கெடுக்க வேண்டாம்!! தாடி பாலாஜி பதில்..

Bigg Boss Gossip Today Actors Actress
By Edward Nov 13, 2024 05:45 AM GMT
Report

தாடி பாலாஜி - நித்யா

நகைச்சுவை நடிகரான தாடி பாலாஜி தற்போது சில விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இவர் நித்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து போஷிக்கா என்ற மகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

நித்யா ஊர் சுத்துகிறாள்..மகள் போஷிக்கா வாழ்க்கையை கெடுக்க வேண்டாம்!! தாடி பாலாஜி பதில்.. | Thadi Balaji Clarifies About Wife Nithya Complaint

அதன்பின் பாலாஜி போதைக்கு அடிமையாகி தன்னையும் மகளையும் குடித்துவிட்டு மோசமாக கெட்டவார்த்தையில் திட்டுவதாக நித்யா குற்றம்சாட்டி இருந்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டதன் மூலம் இருவரும் இணைவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தப்பின் மகள் போஷிகாவை பகடைக்காயாக பயன்படுத்தி நித்யா தன்னிடம் பணம் பறிக்க முயன்று வருவதாக பாலாஜி குற்றம் சாட்டினார். பின் நீதிமன்றம் சென்று இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

நித்யா புகார்

இந்நிலையில் தாடி பாலாஜி மீது நித்யா, புது குற்றச்சாட்டை வைத்துள்ளார். விவாகரத்து பெறும் போது மகளின் படிப்புக்கு ஆகும் செலவை பாலாஜி ஏற்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் இப்போது மகள் போஷிக்காவின் படிப்புச் செலவுக்கு பாலாஜி பணம் தருவதில்லை, பள்ளிக்கட்டணத்தை நான் கடந்த மூன்று ஆண்டுகளாக செலுத்தி வருகிறேன் என்றும் அதற்கான ரசீது அனைத்தும் என்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

நித்யா ஊர் சுத்துகிறாள்..மகள் போஷிக்கா வாழ்க்கையை கெடுக்க வேண்டாம்!! தாடி பாலாஜி பதில்.. | Thadi Balaji Clarifies About Wife Nithya Complaint

பாலாஜி விளக்கம்

நித்யா என் மகளை கவனித்துக் கொள்வதே இல்லை, எப்போதும் பெங்களூரு, ஹைதராபாத்தில் தான் இருக்கிறார்கள். இதனால் என் மகளை அவர்கள் அம்மா வீட்டில் விட்டுவிட்டு அடிக்கடி ஊருக்கு சென்றுவிடுகிறாள். இந்த விஷயம் எனக்கு தெரிந்ததும், தீபாவளிக்கு போஷிக்கா வீட்டுக்கு வந்ததும், இனிமே இங்கேயே இரு, இந்த வருஷம் பீஸ் கட்டக் கொஞ்சம் லேட்டாகிவிட்டது.

இன்னும் இரு நாட்களில் கட்டிவிடுகிறேன் என்று சொன்னேன். அப்போது போஷிக்கா சரி என்று தான் சொன்னாள் அதற்குள் நித்யா என்ன சொன்னார் என்று தெரியவில்லை, போஷிக்கா திரும்ப வரவே இல்லை. வீட்டுக்கு போனாவ போனை ஆஃப் பண்ணி வச்சிட்டா, இதனால் என்ன ஆச்சு, என்ன பிரச்சனைன்னு தெரியாமல் தான், நான் வீட்டுக்கு போனபோது வீடு பூட்டி இருந்ததால் பைத்தியக்காரன் மாதிரி தெருவில் நின்று இருந்தேன்.

நித்யா ஊர் சுத்துகிறாள்..மகள் போஷிக்கா வாழ்க்கையை கெடுக்க வேண்டாம்!! தாடி பாலாஜி பதில்.. | Thadi Balaji Clarifies About Wife Nithya Complaint

மகளை கெடுக்க வேண்டாம்

அதன்பின் தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி பேசினேன், அதற்குள் நித்யா என் மேல் புகார் கொடுத்துவிட்டார். இப்போது என் மகள் போஷிக்கா 9ஆம் வகுப்பு படிக்கிறாள். என் பொண்ணுக்கிட்ட என்னை பற்றி தப்புத்தப்பாக சொல்லி இருக்கா.

நித்யா எங்க வேண்டுமானாலும் போகட்டும் என்ன வேண்டும் என்றாலும் பண்ணட்டும். ஆனால் என் மகள் வாழ்க்கையையும் மட்டும் கெடுக்க வேண்டாம், ஒரு தகப்பனா என் மகளுக்கு நான் செய்ய வேண்டியடை செய்ய நான் செய்ய தயாராக இருக்கிறேன் என்று தாடி பாலாஜி, நித்யாவின் புகார் குறித்து விளக்கமளித்துள்ளார்.