மகளுக்காக நடிப்பை தூக்கி எறிந்த தலைவாசல் விஜய்! மகள் செய்த மிகப்பெரிய செயல்..
சினிமாவை பொருத்தவரையில் வயது இருக்கும் போது தான் தன்னை தேடி எந்தவொரு வாய்ப்பும் வரும். அப்படி சிலர் சினிமாவையே விட்டு விலகும் அளவிற்கு வயது ஒரு குறையாக இருந்துள்ளது வருகிறது. ஆனால் தன் மகளின் எதிர்காலத்திற்காக சினிமாவையே தூக்கிர் எறிந்துள்ளார் பிரபல நடிகர் தலைவாசல் விஜய்.
சினிமாவும் மகள் வாழ்க்கையும்:-
1992ல் வெளியான தலைவாசல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். வெறும் விஜய் என்று அழைக்கப்பட்டவர், தலைவாசல் படத்திற்கு பிறகு படத்தின் பெயரே அடைமொழியாக அமைந்தது.
சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர், மகள் நீச்சல் போட்டியில் ஆர்வம் கொண்டிருந்ததால் அவருக்கு உறுதுணையாக இருந்து பார்க்க சினிமாவை விட்டு விலகினார். தேசிய விளையாட்டு போட்டிகளில் மகள் கலந்து கொண்டது முதலே அவருடன் கூடவே இருந்து வருகிறாராம் தலைவாசல் விஜய்.
நீச்சல் வீராங்கனை:-
தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீனா சமீபத்தில் நேபால் தலைநகர் காதமாண்டுவில் நடைபெற்ற 13வது தெற்காசிய நீச்சல் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். தன் மகளுடன் சென்று போட்டியை பார்த்த தலைவாசல் விஜய்க்கு மகள் மிகப்பெரிய பெருமையை தேடித்தந்துள்ளார்.
50 மீட்டர் பிரஸ்ட் ஸ்டோரக் பிரிவில் ஜெயவீனா வெள்ளிப்பதக்கம் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இதுபோல் தேசிய விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு தங்கம் வென்றும் இருக்கிறாராம் ஜெயவீனா.

