சிவாஜி சார் மரணத்தில் விஜய்யை மிரட்டி மன்னிப்பு கேட்ட விஜயகாந்த்!! பிரபல நடிகர் கூறிய சம்பவம்..
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மறைவு தமிழகம் முழுவதும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. விஜயகாந்த் மறைவு குறித்து பல பிரபலங்கள் அவருடன் பணியாற்றிய சம்பவங்களை பற்றி பகிர்ந்து வந்துள்ளனர்.
அந்தவகையில் நடிகர் தலைவாசல் விஜய் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் விஜயகாந்த் குறித்த தகவல் ஒன்றினை பகிர்ந்திருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைவின் போது விஜயகாந்த் சார் தான் நடிகர் சங்கத்தலைவர்.
காரில் யாரும் வரக்கூடாது நடிகர் சங்கம் ஆபிஸில் பார்க் செய்துவிட்டு வாங்க லாரியில் போய்விடலாம் என்று கூறினார். சிவாஜி சார் உடல் லாரியில் இருந்து இறக்கும் போது அங்கு ஆட்கள் இல்லை.
உடனே விஜயகாந்த் சார் என்னிடம் வந்து பிடித்து விடுங்கள் என்று சொன்னதும் நான் சென்று தூக்கினேன். அவருடன் தேவர் மகன் படத்தில் நடித்துவிட்டு அவர் உடலை தூக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது என்று பேசிக்கொண்டிருந்தோம்.
இதை பார்த்த விஜயகாந்த், என்ன நினச்சிட்டு இருக்கீங்க, எடுத்துட்டு வாங்கன்னா கிசுகிசுன்னு பேசிக்கிட்டு என்று கத்தினார். அதன்பின் என்னை பார்த்து கூப்பிட்டு கோபத்தில் பேசிவிட்டேன் எதுவும் மனசுல வெச்சுக்காத, மன்னிச்சிடு என்று கூறியதாக தலைவாசல் விஜய் பகிர்ந்திருக்கிறார்.