வில்லியான நடிகை சமந்தா? 5 வருடங்களுக்கு பின் விஜய்யை வைத்து இயக்குனர் போட்ட திட்டம்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் பக்கம் சென்று கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை சமந்தா. நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கடந்த ஆண்டு பிரிந்த சமந்தா புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு அப்படியொரு குத்தாட்டம் போட்டு மக்களை தன் பக்கம் இழுத்தார்.
இதன்மூலம் அவரது மார்க்கெட் எகிர 5 கோடி ரூபாய் அதற்காக சம்பளமாக பெற்றுக்கொண்டார். இதன்பின் குஷி, யசோதா, சகுந்தலம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுவரை சமந்தா திருமணத்திற்கு முன் நடிகர் விஜய்யிடன் கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் சூப்பர் ஜோடி என்று கொண்டாடபட்டனர்.
இதனை அடுத்து சமந்தாவை விஜய்யின் 67வது படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் இருவரும் ஜோடியாக நடித்து வந்த நிலையில் சமந்தாவை வில்லியாக நடிக்க வைக்கவுள்ளராம்.
அதேபோல் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்க திட்டமிட்ட நிலையில் கால்ஷீட் பிரச்சனையால் அவரை விட்டுவிட்டு சிவகார்த்திகேயனின் தற்போதைய ராசியான நடிகை பிரியங்கா அருள் மோகனை ஜோடியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
இதன் அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் தானே அறிவிப்பே என்று பத்திரிக்கையாளர்களிடம் சமீபகாலமாக கூறி வருகிறார்.