சன் பிக்சர்ஸை மிரட்டும் தளபதி ரசிகர்கள்! சூர்யா படத்தால் வைரலாகும் ஹேஷ்டேக்?
vijay
beast
beastupdate
By Edward
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது டப்பிங் வேலைகளை மும்முரமாக முடித்து வருகிறார் விஜய்.
அதேபோல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியும் வருகிறார். பீஸ்ட் படம் அடுத்த ஆண்டு 2022 மே மாதம் வெளியாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தினை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.
இதனால் விஜய் ரசிகர்கள் கடுப்பாகி எப்போது பீஸ்ட் அப்டேட் வரும் என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகிறார்கள். வலிமை அப்டேட் என்று ஹாஷ்டாக்குகள் உருவாகியதை போன்று தற்போது சன் பிக்சர்ஸை திட்டியவாறு தளபதி ரசிகர்கள் ஹேஷ்டேக்கினை டிரெண்ட்டாக்கி வருகிறார்களாம்.