பிரபல நடிகையை 10 கோடி பேரம் பேசிய சூப்பர் ஸ்டார்! லட்சத்தில் கூட இருக்காங்களே நெல்சன்

nelson rajinikanth sunpictures thalaivar169 aiswaryarai
By Edward Feb 16, 2022 06:50 AM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து உலகம் முழுவதும் தன் ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இந்த வயதிலும் என்னால் நடிக்க முடியும் இப்படியும் வொர்க்கவுட் பண்ண முடியும் என்று அவரின் உடல் வாகுவல் காட்டி வருகிறார். தற்போது 169வது படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிரூத் இசையமைப்பதாக உறுதி தகவல் வெளியாகியது. இந்நிலையில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற குழப்பத்தில் இருக்கிறார் நெல்சன்.

அதற்கு ரஜினிகாந்த் சிறு வயது நடிகைகள் வேண்டாம் உலகம் அறியும் நடிகையாகவும் வயதுக்கு மேல் இருக்கும் நடிகையாக இருக்க வேண்டும். அதற்கு ஐஸ்வர்யா ராய் மீது தூண்டில் போடலாமே என்று கூறியுள்ளார் ரஜினி.

அதுவும் அவருக்கு 10 கோடி தரவேண்டியிருக்கும் என்பதால் சற்று தயங்கியுள்ளனர் சன் பிக்சர்ஸ். லட்சத்தில் கூட நடிகைகள் இருக்கலாம் ஐஸ்வர்யா ராயிற்கு இருக்கும் மார்க்கெட் படம் சூப்பராக வரும் என்கிறாராம் சூப்பர் ஸ்டார்.