பிக் பாஸ் தாமரையின் கணவர் இந்த தொழில் செய்கிறாரா..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 5 இறுதிக்கட்டத்தை நெருங்க இன்னும் இரண்டு மூன்று வாரங்களிலே உள்ளது.
இந்த பிக் பாஸ் 5வது சீசன் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ள நபர் தாமரை. தாமரை மேடை நாடக கலைஞர். பிக் பாஸ் வீட்டுக்குள் வர பொழுது வெள்ளந்தியா இருந்த தாமரை, சில வாரங்களுக்கு பிறகு புயலாக மாறினார்.
இவருடைய மாற்றம் ரசிகர்கள் அனைவரையும் ஷாக் ஆக்கியது. மேலும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பிரீஸ் டாஸ்க் நடந்துமுடிந்தது. இதில் தாமரையின் காதல் கணவரும், அவருடைய மகனும் வந்தார்கள்.
இந்நிலையில், தாமரையின் கணவர் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் போது நீங்கள்தான் தாமரையின் கணவர், என பலரும் கேட்கிறார்கள் என பிக் பாஸ் வீட்டில் தாமரையிடம் சொன்னார்.
