இவ்வளவு தானா? பிக்பாஸில் தாமரை வாங்கிய மொத்த சம்பளம்...

salary biggbosstamil5 thamarai
By Edward Jan 12, 2022 05:34 AM GMT
Report

பிக்பாஸ் 5 சீசன் இந்த வாரம் இறுதி வாரத்தில் உள்ளது. 5 போட்டியாளருக்கும் இனி கடுமையான போட்டிகள் நடத்தவுள்ளனர். இந்நிலையில் கடந்தவாரம் வீட்டினைவிட்டு வெளியேறிய தாமரை பற்றி விவரங்கள் வைரலாகி வருகிறது.

அம்மாவின் பழைய கூறை வீடு கட்டாமல் இருக்கையில் அதை கட்ட வேண்டும் என்ற ஆசையும் அதிக கடனில் இருப்பதால் பிக்பாஸில் வரும் சம்பளத்தை வைத்து பாதி அடைக்கலாம் என்ற எண்ணமும் தாமரைக்கு இருந்துள்ளது.

அப்படி பிக்பாஸில் கிடைத்த சம்பளத்தை வைத்து ஏதாவது ஒன்று செய்யலாம் என்ற கனவில் வீட்டிற்குள் வந்தார் தாமரை.

ஆனால் பிக்பாஸில் ஒரு வாரத்திற்கு 70 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்ட தாமரைக்கு 98 நாட்களுக்கு 9.80 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இதற்கு அவர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டே சென்று இருக்கலாம் என்று பலர் கூறி வருகிறார்கள்.