2 குழந்தை தாரேன்..கல்யாணம் பண்றேன்!! கூமாபட்டி தங்கபாண்டியால் ஷாக்கான நடிகை சாந்தினி..
சிங்கிள் பசங்க
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மத்தியில் தற்போது வெறுப்பை சம்பாதித்து வரும் நிகழ்ச்சி தான் சிங்கிள் பசங்க.
தற்போது டி ராஜேந்தர் நடுவராக இருக்கும் இந்நிகழ்ச்சியில் எல்லைமீறிய கிளாமர் காட்சிகள் இரட்டை வசனங்கள் பார்ப்போரை முகம் சுழிக்க வைத்து வருகிறது. அப்படி கூமாபட்டி தங்கபாண்டி மற்றும் நடிகை சாந்தினி இருவரும் நெருக்கமாக ஆடியது மிகப்பெரிய ட்ரோல் மெட்டீரியலானது.
இந்நிலையில் சமீபத்தில் தங்கபாண்டி - சாந்தினி அளித்த பேட்டியொன்றில் ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை தங்கபாண்டி கூறியிருக்கிறார். அதில், சூரியவம்சம் படத்தில் பாடலுக்கு சரத்குமார் மாதிரி கட்டிப்பிடித்து நடிக்கச்சொன்னார்கள், ஆனால் எனக்கு கூச்சமாக இருந்தது.
கல்யாணம் பண்றேன்
அப்போது சாந்தினி தான் தைரியம் சொல்லி எப்படி கட்டிப்பிடித்து நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார். அவர் தான் எனக்கு குரு மாதிரி, நடிக்க கற்றுக்கொடுத்தார்.
மேலும் பேசிய தங்கபாண்டி, நீங்க கோபப்படாதீங்க, நான் உங்களை கல்யாணம் பண்ணுவேன் நவம்பர் மாசம், 2 குழந்தை தாரேன்னு மறைமுகமா சொல்றேன் என்று சொன்னதும் சாந்தினி ஷாக்காகி அவரை மெல்ல அடித்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.