தர்ஷன் லாஸ்லியா.. அண்ணன் தங்கச்சி என சொல்லிட்டு செய்ற வேலையா இது?

Losliya Tharshan Koogle Kuttapa
By Parthiban.A Jan 20, 2022 03:00 PM GMT
Parthiban.A

Parthiban.A

Report

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவுக்கு போனாலே எப்போதும் புதுமுகங்கள் கூட பிரபலமாக மாறிவிடுவார்கள். அதுவும் உலக அளவில் பாப்புலர் ஆனால் சினிமா வாய்ப்பு தானாக தேடி வரும்.

அப்படி பிக் பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்று பாப்புலர் ஆனவர்கள் லாஸ்லியா மற்றும் தர்ஷன். இலங்கையை சேர்ந்த அவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் அண்ணன் தங்கை என சொல்லி தான் சுற்றி கொண்டிருந்தனர். அதன் பின் ஷோ முடிந்தபிறகு அவர்கள் தற்போது ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.

கூகுள் குட்டப்பா என பெயரிடப்பட்டு இருக்கிறது அந்த படம். அந்த படத்தின் அலை அலை என்கிற பாடல் நாளை வெளிவரும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அவர்கள் ரொமான்ஸ் செய்வது போன்ற போஸ்ட்டரை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் "அண்ணன் தங்கச்சி என சொல்லிட்டு செய்ற வேலையா இது?" என கேட்டு வருகின்றனர்.