VJ விஷால் நடிக்கிறார்!! என்னிடம் அப்படி சொன்னார்.. மௌனம் கலைத்த தர்ஷிகா
பிக் பாஸ்
பிக் பாஸ் 8ம் சீசன் இறுதி கட்டத்தில் தற்போது இருக்கிறது. இந்த சீசன் 8ல் காதல் ஜோடிகளாக ரசிகர்களால் பார்க்கப்பட்டவர்கள் தர்ஷிகா மற்றும் விஷால்.
ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் காதல் குறித்து சர்ச்சை உருவாகும். ஆரவ் - ஓவியா, கவின் - லாஸ்லியா என இவர்களின் பெயர்கள் காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பின் அது போன்று எதுவும் இல்லை என அவர்களே கூறியுள்ளனர். அந்த வகையில், பிக் பாஸ் 8ல் காதல் ஜோடிகளாக விஷால் - தர்ஷிகா வலம் வந்தனர்.
தர்ஷிகா பேட்டி
இந்நிலையில், எலிமினேட் ஆன பின்பு பேட்டி ஒன்றில் பேசிய தர்ஷிகா விஷால் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், "அவர் மீது காதல் அப்போது இருந்தது உண்மை தான்.
ஆனால், அவரை பற்றி வெளியில் வந்த பின்பு தான் தெரிந்துகொண்டேன். விஷால் என்னிடம் நன்றாக நடித்து இருக்கிறார், என்னிடம் நான் அழகாக இருப்பதாக கூறுவார்.
ஆனால் மொக்க மூஞ்சி என பின்னாடி பேசி இருக்கிறார். இதில், எது உண்மை என எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை" என தர்ஷிகா கோபமாக கேட்டிருக்கிறார்.