நயன்தாரா முகத்தை பார்த்தா அப்படியா தெரியுது!! விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கணவர்..
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் சென்று 4 மாதம் கழித்து வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெனர்.

இதன்பின் ஷாருக்கானின் ஜவான் படத்தின் ஷூட், கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வந்தார். இதற்கிடையில் சிபாரிசு செய்த ஏகே62 படம் பறிபோனது. கமிட்டாகிய 2 படங்களால் 20 கோடியை கோட்டையை விட்டது என்று பல செய்திகள் பிரச்சனைகளை சந்தித்து வந்தார் நயன் தாரா.

இதனால் விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்து பிரியவுள்ளார் என்ற முடிவை நயன் எடுத்துள்ளதாக செய்திகள் வதந்தியாக பரவி வந்தது. மேலும் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக திருமணமான சில மாதத்திலும் செய்திகள் பரவியது.
ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் குழந்தைகளுடன் எடுத்த வீடியோ வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்தனர். தற்போதும் அந்த விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜோடியாக தன் இரு மகன்களுடன் மும்பை சென்றுள்ளனர்.

அப்படி சோகமான முகமே நயன் தாரா முகத்தில் தெரியவில்லையே என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். தற்போது விக்னேஷ் சிவன், நயன் தாரா தங்கள் வேலைகளில் கவனம் செலுத்த மும்பையில் செட்டிலாகி குடும்பம் நடத்தி வருகிறார்களாம்.