அவங்களே காணாமல் போய்ட்டாங்க.. கடைசிவரை நின்னு கெத்து காட்டும் விஜய் டிவி தொகுப்பாளினி
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி முன்னணி இடத்தினை பிடித்தாலும் ஒரு சறுக்கள் ஏற்பட்டால் ஃபீல்ட் அவுட் ஆகும் நிலை ஏற்படும். அப்படி நடிகர்களின் மார்க்கெட் குறைவதை விட நடிகைகளின் மார்க்கெட் சுலபமாக இறங்குவதும் இயல்புதான்.
அப்படி ராதிகா, மீனா, குஷ்பு, திரிஷா உள்ளிட்ட நடிகைகள் அந்தந்த காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்தாலும் அவர்களுக்கான மார்க்கெட் இல்லாமல் போனால் குணச்சித்திர ரோல் தான் மிஞ்சும்.
ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து தன்னுடைய சிம்மாசனத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் இருந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
சின்னத்திரையில் சீரியில் நடிக்க ஆரம்பித்து ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பி காஃபி வித் டிடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு சேர்த்து ரஜினி, கமல் முதல் ஷாருக்கான் வரை டிடி பேட்டி எடுக்காத நட்சத்திரங்களே கிடையாது.
அந்தளவிற்கு இளமை தோற்றத்துடன் சின்னத்திரை ராணியாக ஜொலித்து வருகிறார். அப்படியிருக்கையில் சமீபத்தில் விஜே அர்ச்சனா டிடி-யை பேட்டியொன்றில் பல சுவாரஷ்யமான கேள்விகளை கேட்டிருந்தார்.
அதில், தொகுப்பாளர்களுக்கு இப்படி தான் ஆடை அணியவேண்டும் என்ற அமைப்பையும் விஜேவுக்கென தனியாக ஆடை வடிவமைப்பாளர் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் உருவாக்கிய முதல் VJ, டிடி தான். அதை பெருமையுடன் கூறியும் இருக்கிறார். அப்போது ஹீரோயின்களாக இருந்தவர்கள் கூட இப்போது ஃபீல்டில் இல்லை.
என்னை வெள்ளித்திரையில் நடிக்க சொன்னவர்களிடன், எனக்கென ஒரு ராஜ்யத்தை உருவாக்கி உட்கார்ந்திருக்கிறேன் என்று வெளிப்படையாக அர்ச்சனாவிடம் கூறியிருக்கிறார் டிடி.