படுதோல்வியால் மாபெரும் நஷ்டத்தை சந்தித்துள்ள ராஜா சாப்.. பிரபாஸ் படத்திற்கு இப்படியொரு நிலைமையா
Prabhas
Box office
By Kathick
பான் இந்தியன் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் பிரபாஸ். இவர் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் ஆதி புருஷ். ராமாயணத்தை மையமாக வைத்து இப்படம் உருவானது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படத்தின் தோல்வியின் காரணமாக ரூ. 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அந்த நஷ்டத்தை சரிசெய்யதான் ராஜா சாப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், தற்போது ராஜா சாப் படமும் படுதோல்வியடைந்த நிலையில், ரூ. 150 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இப்படியொரு தகவல் திரையுலக வட்டாரத்தில் உலா வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.