சங்கர்-ராஜமெளலிலாம் பிரம்மாண்ட இயக்குனரே கிடையாது! எப்பவுமே இவர்தானாம்?
தென்னிந்திய சினிமாவிற்கு பிரம்மாண்ட இயக்குனர் என்பதற்கு பேர் போன இயக்குனர்கள் என்றால் சங்கர், ராஜ மெளலி தான் என்று பேர் எடுத்து அதை நிரூபித்தும் வருகிறார்கள்.
சங்கர், சிவாஜி, நண்பன், எந்திரன், 2.0 போன்ற படங்களாலும், ராஜமெளலி பாகுபலி, ஆர் ஆர் ஆர் படத்தின் மூலமாக இந்த இடத்தினை பிடித்து வருகிறார்கள்.
ஆனால் இவர்கள் எல்லாம் பிரம்மாண்ட இயக்குனர்கள் ஆவதற்கு முன்பே இந்த இயக்குனர் தான் தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் தன் தந்தை தியாகராஜனுடன் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது பலர் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் 90ஸ் காலக்கட்டத்தில் பிரம்மாண்ட என்று சொன்னால் அது ஆர் கே செல்வமணி தான். செம்பருத்தி, புலன் விசாரனை 2, கண்மணி போன்ற படங்களில் ஆர்கே செல்வமணி இயக்கத்தில் நடித்திருந்துள்ளார்.
அப்போதைய காலக்கட்டத்தில் ஒரு பாடலுக்கு 500 நடன கலைஞர்களை வைத்து பிரம்மாண்டமாக எடுத்திருப்பார். அப்படி சினிமாவில் எடுக்க முடியுமா என்று சாதித்து காட்டியவர் தான் ஆர்கே செல்வமணி என்று புகழ்ந்துள்ளார் நடிகர் பிரசாந்த்.