என் பைக் என்னடா பண்ணுச்சி? பைக்கோடு ரோட்டை போட்ட காண்ட்ரேக்டர்..

Tamil nadu
By Edward Jun 29, 2022 06:00 AM GMT
Report

வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பகுதியில் அரசு சார்பாக சிமெண்ட் ரோடு போடப்பட்டது. வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் உள்ள ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை தன் கடைக்கு முன் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

காலையில் எழுந்து பைக்கை எடுத்து செல்லலாம் என்று பார்த்த அவருக்கு சிமெண்ட் ரோடு போடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார். பைக்கோடு சேர்த்து கலவை போடப்பட்டு டயரை எடுக்கமுடியாமல் போயுள்ளது. இதுகுறித்து அந்த நபர் கூறுகையில் 11 மணியளவில் தான் பைக்கை நிறுத்திவிட்டு சென்றான் என் தம்பி.

அப்போது கூட அங்கு சாலை போடவுள்ளது என்று எந்த அறிவிப்பும் வழங்கவில்லை. இரவோடு இரவாக பைக்கை சேர்த்து ரோடு போடபட்டுள்ளது என்று கூறியுள்ளார். கடமைக்கு என்று இரவோடு இரவாக போடப்பட்டுள்ள இந்த ரோடு தற்போது இணையத்தில் விமர்சன பொருளாக மாறி வைரலாகி வருகிறது.