உண்மையிலேயே லியோ ரீலு அந்துருச்சு!! விஜய்க்கு மட்டும் ஏன் இந்த சோதனை..
நடிகர் விஜய் நடித்த படங்கள் பிரச்சனைகள் இல்லாமல் வெளியாவது என்பது கடினம் தான். அப்படி சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியான படங்களுக்கு பல பிரச்சனைகள் வந்து பின் போராட்டத்திற்கு பின் திரையும் வரும்.
அப்படி தான் லியோ படம் வெளியாக ஆரம்பித்தது முதல் தற்போது வரை பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் விஜய். சிகரெட் பிடிப்பது முதல் வன்முறை காட்சிகள் வரை, அதையெல்லாம் சமாளித்து கடந்த 19 ஆம் தேதி வெளியானது.
அதில் சில திரையரங்குகளில் காட்சிகள் ஓட்டவில்லை. தற்போது இந்தியாவை தாண்டி அமெரிக்காவில் உள்ள திரையரங்கில் லியோ படம் ஓடிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது.
திரையரங்கு உரிமையாளருக்கு விநியோகஸ்தருக்கும் பிரச்சனை ஏற்பட லியோ படம் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது உள்ளே புகுந்த விநியோகஸ்தர் கோபத்தில் ஸ்கிரீனை கிழிக்த்திருக்கிறார். இதனால் படம் பார்த்திருந்தவர்கள் பயத்தில் பாதியில் வெளியேறியுள்ளனர்.
https://www.cinemapettai.com/a-theater-screen-torn-in-anger-while-the-movie-leo-is-playing/ ஏற்கனவே டிரைலரை திரையரங்கில் வெளியிட்டதால் தியேட்டரே நாசமாக போய்விட்டது. இப்படி விஜய்க்கு மட்டும் ஏன் பல சோதனைகள் அடுக்கடுக்காய் வருகிறது என்று இணையத்தில் புலம்பி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.