தயாரிப்பாளர் லலித் விஜய் பினாமி தான்!! தியேட்டர் உரிமையாளரை மிரட்டும் லியோ குழுவினர்..

Gossip Today Leo
By Edward Oct 28, 2023 08:00 AM GMT
Report

லியோ படம் கடந்த 19 ஆம் தேதி உலகளவில் வெளியாகி சுமார் 500 கோடி வசூலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் லியோ படம் கலவையான விமர்சனம் பெற்றதால் பாதி தியேட்டர்களில் கூட்டம் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் லியோ படத்தால் எங்களுக்கு லாபம் இல்லை என்று பகீரங்கமாக பேட்டியளித்து வருகிறார்கள்.

இருட்டு அறையில் முரட்டு போஸ்!! 18 வயதான அஜித் ரீல் மகள் அனிகா புகைப்படம்..

இருட்டு அறையில் முரட்டு போஸ்!! 18 வயதான அஜித் ரீல் மகள் அனிகா புகைப்படம்..

அதில் திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணி மற்றும் திருச்சி ஸ்ரீதர் போன்றவர்கள் பல பேட்டிகளில் கலந்து கொண்டு விமர்சித்தும் வருகிறார்கள்.

அதில் திருச்சி ஸ்ரீதர் ஒரு பேட்டியில், திருச்சி ஸ்ரீதர் ஒரு பேட்டியில் லியோ படத்தின் தயாரிப்பாளர் விஜய் தான், பினாமிகளாக ஜெகதீஸ் மற்றும் லலீத் உள்ளனர் என நம்பத்தகுந்த நபர் ஒருவர் கூறியதாக அந்த பேட்டியில் ஸ்ரீதர் தெரிவித்தார். இதையறிந்த லியோ குழுவினர் ஆள் வைத்து திருச்சி ஸ்ரீதரை மிரட்டியுள்ளனர்.

இதை நெட்டிசன்கள் பலர் படம் ஓடவில்லை என்பதால் ஆள் வைத்து மிரட்டுவீர்களா என்று கண்டபடி கிண்டலடித்து வருகிறார்கள்.