நான் பைத்தியக்காரியா...அப்போ அவங்க யாரு? பிக்பாஸ் நந்தினி ஓபன் டாக்..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 9 பற்றிய விஷயங்கள் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. கடந்த வாரம் விஜே பார்வதி - கம்ருதீனுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதை வைத்து பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பிக்பாஸ் நந்தினி
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 9ல் என்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என்று கூறி நந்தினி வெளியேறினார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அனைவரும் என்னை மறந்து இருப்பீர்கள். பிக்பாஸ் வீட்டில் நுழைந்த நான்கு நாட்களிலேயே அந்த வீட்டில் ரியாலிட்டி இல்லை என்று வெளியே வந்துவிட்டேன். இன்று அதை நினைக்கும் போது நான் பெருமையாக நினைக்கிறேன். மன உளைச்சலுக்காளாகிய, எனக்கு கேரியரே இல்லாமல் போய்விட்டது.
வெளியே பார்க்கும் பலர் நீ பைத்தியக்காரி மாதிரி கத்திக்கிட்டே இருக்க. சண்டை போட்டுக்கிட்டே இருக்க என்றார்கள். இதை நாங்களா செய்யவில்லை, பண்ண வைக்கிறார்கள். பைத்தியக்காரி நான் என்றால், பண்ண வைக்கிற அவர்களை என்னவென்று சொல்வது, எனக்கு கவுன்சிலிங் தேவையில்லை, அவர்களுக்கு தான் தேவை. நான் ஒரு தொகுப்பாளினி, நான் எங்கே போனாலும் நீங்கள் ஸ்டேபிளா இல்லை.

எனக்கு பைத்தியக்காரி என்ற பட்டத்தை கட்டி அனுப்பி இருக்கிறார்கள், நான் வெளியில் வந்த பின் எந்தவொரு ரெஸ்பான்ஸும் எனக்கு கொடுக்கல, பிக்பாஸ் வீட்டிற்குள் போன 4 நாட்களில் இங்கு ரியாலிட்டி இல்லை என்று சொல்லி கெத்தா வெளியே வந்துவிட்டேன். உண்மையில் பிக்பாஸ் வீட்டில் ரியாலிட்டி கிடையவே கிடையாது.
ஷாவில், சாண்ட்ரா எப்போதும் அழுதுக்கிட்டே இருக்காங்க, பிரஜன் போகும்போது வெளியே போனாங்க, ரம்யா ஜோ, விஜய் சேதுபதி முன்பே நான் வெளியில் போறேன் என்று சொன்னாங்க, அவங்களை ஏன் வெளியில் அனுப்பவில்லை, யார் வெளியே போகவேண்டும் என்று எல்லாரும் சேர்ந்து டிஸ்கஸ் பண்ணித்தான் வெளியில் அனுப்புவாங்க, என்னை எந்த சதியோ வெளியில் அனுப்பினார்கள் என்று எனக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
விஜய் சேதுபதி
இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை நினைத்து ஃபீல் பண்றேன். அந்த வீட்டில் பலர் நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இன்னைக்கு பார்வதிக்கு ரெட் கார்ட் கொடுத்திருக்கிறார்கள். ஏன் சண்டை நடக்கும்போது பிக்பாஸ் அதை தடுத்து இருக்கலாமே, பிக்பாஸ் நிகழ்ச்சிய எடிட் செய்துதான் போடுகிறார்கள். அவர்கள் எது வெளியில் தெரியவேண்டும் என நினைக்கிறார்களோ, அது மட்டும் தான் வெளியில் தெரியும், விஜய் சேதுபதி போட்டியாளர்கள மதிக்கிறதே இல்ல. அவமதிக்கிறாரு. கமல் சார் இருந்த வர அவர் நல்லா கொண்டு போனாரு. ஆனா இவரு சரியில்ல. பேசாம இவரே உள்ள போய் போட்டியாளரா விளையாடலாம் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் நந்தினி..