சாதி பார்த்து டிக்கெட் கெடுக்குறாங்க..அடித்து துறத்தினாங்க!! இளைஞர் வெளியிட்ட வீடியோ..உண்மை என்ன..
திருவண்ணாமலை சக்தி திரையரங்க நிர்வாகிகள் மீது இளைஞர் ஒரு குற்றம்சாட்டி வீடியோவை வெளியிட்டு, படம் பார்க்க வந்த எனக்கு திரையரங்க நிர்வாகிகள் டிக்கெட் தர மறுத்ததாகவும், இழிவான வார்த்தைகளால் திட்டியும் அடித்தும் விரட்டியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இளைஞர் வெளியிட்ட வீடியோ
இளைஞர் ஒருவர், திருவண்ணாமலை சக்தி தியேட்டருக்கு யாராவது படம் பார்க்க செல்கிறீர்கள் என்றால் கவனமாக இருங்கள், டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கேட்கும்போது உங்களை தரக்குறைவாக பேசுவார்கள். ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டால், டிக்கெட் தரமுடியாது என்று சொல்வார்கள். ஒருக்கட்டத்திற்குமேல் நான் குடித்துவிட்டு சண்டை போடுவதாக கூறி பழி சுமத்தினார்கள். அங்கிருந்த மக்களிடம் நான் குடித்திருக்கிறேனா என்று கேட்டேன், அவர்கள் இல்லை என்றுதான் சொன்னார்கள்.
எனக்கு ஏன் டிக்கெட் தர முடியாது என்று கேட்டபோது அவர் உனக்கு டிக்கெட் தரமுடியாது என்று என்னை வெளியே போகச்சொன்னார். நான் காவல்துறைக்கு ஃபோன் செய்து வெளியே காத்திருந்தேன். அப்போது ஒவ்வொருவராக வந்து என்னை கெட்ட வார்த்தையில் திட்டத் தொடங்கினார்கள், திரையரங்க நிர்வாகி ஒருவர் நான் இந்த ஊரைச் சேர்ந்தவன் என்பதால் அவரே நான் இன்ன சாதியை சேர்ந்தவன் என்று நினைத்து எனக்கு டிக்கெட் கொடுக்க மறுத்தார்.

நான் அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தபோது நீயெல்லாம் ஏண்டா மேல உட்காரணும் கீழ உட்காருடா என்று என்னை திட்டினார் என்று அந்த இளைஞர் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இதனையடுத்து திரையரங்க நிர்வாகம் சார்பாகவும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு விளக்கம் தரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
@tn_updatess மறுபக்கம் இப்படி இருக்கே
— Sivaji_KS (@Sivaji_KSS) November 18, 2026