பிக் பாஸ் வீட்டிலிருந்த வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. யார் தெரியுமா
சின்னத்திரையில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி என்றால், அனைவருக்கும் உடனடியாக நினைவிற்கு வருவது பிக் பாஸ் தான்.
பிக் பாஸ் சீசன் 8 கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய நிலையில், 83 நாட்களை கடந்துள்ளது. 23 போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்தாலும், மக்களிடையே அதிகம் கவனம் ஈர்த்தவர்கள் மட்டுமே வீட்டிற்குள் தற்போது உள்ளனர்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள், போட்டியாளர்களின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் வந்தனர். இதனால் போட்டியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் இது மகிழ்ச்சியான வாரமாகவே சென்றது.
12 போட்டியாளர்களின் இந்த வாரம் 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், வெளியேறியுள்ள போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து அன்ஷிதா வெளியேறியுள்ளார். 83 நாட்களை கடந்து பிக் பாஸ் வீட்டிற்குள் கடுமையாக போட்டியிட்ட அன்ஷிதா, இந்த வாரம் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று வெளியேறியுள்ளார்.
அன்ஷிதாவின் எலிமினேஷன் அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. சிலர் இது Unfair eviction என்றும் கூறி வருகிறார்கள்.