வலிமை விட துணிவு மோசமா? துணிவு படத்தை கழுவி ஊத்திய அஜித் ரசிகர்கள்

Ajith Kumar H. Vinoth
By Dhiviyarajan Jan 11, 2023 09:41 AM GMT
Report

துணிவு

தமிழ் நாட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று வெளியானது.

ஹெச் வினோத் - அஜித் கூட்டணியில் வெளிவந்த இப்படம் இந்த ஆண்டின் மிக பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் ரசிகர்கள்

இந்த படத்திற்கு பலரும் பாசிட்டிவ்வாக விமர்சனம் செய்து வரும் நிலையில், அஜித்தின் ரசிகர்கள் சிலர் படத்தை பார்த்துவிட்டு தங்களின் விமர்சனங்களை கூறியுள்ளனர்.   

அதில் அவர்கள், " படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. நான் அஜித்தின் ரசிகன் இருந்தாலும் துணிவு திரைப்படம் எனக்கு பிடிக்கவில்லை. படத்தில் வெறும் சண்டை காட்சிகள் மட்டும் தான் இருக்கிறது. வலிமை படத்தை விடவும் மோசமாக இருக்கிறது" என ரசிககள் சோகத்துடன் கூறியுள்ளனர்.