விஜய் வைத்த பார்ட்டியில் விக்ரம், உதயநிதி ஸ்டாலின்! கையில் மது பாட்டிலுடன் பிரம்மாண்ட இயக்குநர்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய், இவர் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அப்படம் பொங்கல் பண்டியில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி. இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான அப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.
மேலும் அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மறுபக்கம் பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார் தளபதி விஜய். துப்பாக்கி பட வெற்றியை கொண்டாடும் விதமாக பிரபலங்களை அழைத்து கொண்டாடியுள்ளார் விஜய்.
அதன்படி அந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் விஜய்யுடன் விக்ரம், முருகதாஸ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குநர் ஷங்கர் கையில் மதுபானத்துடன் உள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
