திருமணத்திற்கு பின்பு ஆடையின்றி வெறும் துண்டுடன் நடித்த பிரபல நடிகை!.முன்னாள் காதலுனுக்காக இப்படி ஒரு செய்யலா
கடந்த 2012 -ம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த ‘ஏக் தா டைகர்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
இப்படத்தின் மூன்றாம் பாகம் தீபாவளிக்கு சரவெடியாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் கேத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஸ்மி, ரேவதி நடித்துள்ளனர். மேலும் இதில் கேமியோ ரோலில் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
தற்போது டைகர் 3 படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. அதில் கேத்ரீனா கைஃப் ஆடையின்றி வெறும் துண்டன் சண்டை போடுவது போன்ற காட்சி இடம் பெற்று இருக்கிறது.
கேத்ரீனா கைஃப் சல்மான் கானை காதலித்து வந்ததாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்பட்டது, ஆனால் சில காரணத்தால் இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து கேத்ரீனா கைஃப் நடிகர் விக்கி கௌஷலை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.