ஒரு கோடிப்பே! திருப்பதி ஏழுமலையான் கோவில் டிக்கெட் விலை.. தலை சுத்திடும் போல

Tirumala Triupati
By Parthiban.A Dec 20, 2021 03:16 PM GMT
Report

திருமலை திருப்பதியில் வழக்கமான தரிசன டிக்கெட்டுகள் உடன் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை அவ்வப்போது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது உதய அஸ்தமன சேவை என்ற பெயரில் சிறப்பு டிக்கெட் கொடுக்க தேவஸ்தானம் போர்டு முடிவு செய்திருக்கிறது.

காலையில் தொடங்கும் சுப்ரபாதம் தொடங்கி இரவு முடியும் ஏகாந்த சேவை வரை அனைத்தையும் கோவிலில் ஒரு நாள் முழுவதும் இருந்து தரிசிக்கும் வகையில் தான் இந்த உதய அஸ்தமன சேவை இருக்கும்.

சாதாரண நாட்களில் ஒரு கோடி ரூபாயும், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஒன்றரை கோடி ரூபாயும் இதற்கான டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்க பட்டு உள்ளது. ஒரு முறை கட்டணம் செலுத்தாவிட்டால் 25 வருடங்களுக்கு இந்த சேவையில் பங்கேற்கலாம்.

இந்த டிக்கெட்டுகள் மொத்தமாக 531 மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

ஒரு கோடிப்பே! திருப்பதி ஏழுமலையான் கோவில் டிக்கெட் விலை.. தலை சுத்திடும் போல | Tirumala Tirupati Seva Ticket Price 1 Cr