காக்கா கதை, குருவி கதை சொல்லிட்டியிருக்காங்க..தமிழ் சினிமா சாகும்!!திருப்பூர் சுப்ரமணியம் காட்டம்..

Rajinikanth Vijay Gossip Today Tirupur Subramaniam Cinema News
By Edward Dec 26, 2025 06:30 AM GMT
Report

திருப்பூர் சுப்ரமணியம்

திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், ஏகப்பட்ட விநியோகஸ்தர்கள் காலி. சிங்கிள் தியேட்டர்கள் காலி. லைகா போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித்குமார் போன்ற முன்னணி நடிகர்களால் வாஷ் அவுட் செய்து அனுப்பிவிட்டனர். இயக்குநர்களை மதிப்பதே இல்லை.

காக்கா கதை, குருவி கதை சொல்லிட்டியிருக்காங்க..தமிழ் சினிமா சாகும்!!திருப்பூர் சுப்ரமணியம் காட்டம்.. | Tirupur Subramaniam Says Big Heroes Salary Issues

ஆடியோ லான்ச் வைத்தால், காக்கா கதை சொல்வது, குருவி கதை சொல்வது என்று முன்னணி ஹீரோக்கள் துதி பாடிக்கொண்டிருந்தார். இயக்குநர்கள் நல்ல கதையை குழதைப்போல் உருவாக்கி எடுத்து வைத்தால், அந்த குழந்தையின் கைகளை பிச்சிப்போடுவது, கால்களை உடைப்பது என தங்களுக்கு எல்லாமே தெரிந்தது போல பண்ணி படங்களை பிளாப் செய்து வருகிறார்கள். தமிழ் சினிமா இனி மெல்லச்சாகும்.

காக்கா கதை, குருவி கதை சொல்லிட்டியிருக்காங்க..தமிழ் சினிமா சாகும்!!திருப்பூர் சுப்ரமணியம் காட்டம்.. | Tirupur Subramaniam Says Big Heroes Salary Issues

சம்பளம்

முன்பெல்லாம் விஜய், ரஜினி, அஜித், உள்ளிட்டவர்கள் சிங்கிள் டிஜிட்டில் தான் சம்பளம் வாங்கி வந்தனர். சாட்டிலைட் உரிமம், கிளோபல் ரிலீஸ் காரணமாக சம்பளம் 50 கோடி வரை உயர்ந்தது. திடீரென ஓடிடி நிறுவனங்களின் படையெடுப்பால் ஹீரோக்களில் சம்பளம் 100 கோடி முதல் 200 கோடி ஆகிவிட்டது.

முன்னணி நடிகர்களுக்கு மனிதாபிமானமெ இல்லை, ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் சினிமாவை விட்டே விலகிவிட்டனர். சிங்கள் தியேட்டர்கள் எல்லா அடுக்குமாடி குடியிருப்பாகவும் ஷாப்பிங் மாலாகவும் மாறிவிட்டன.

ஆனால் சம்பளத்தை குறைக்கமாட்டேன், 2 வருஷம் சும்மா கூட இருப்பேன் என்று ஹீரோக்கள் மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.