விஜய் கேரக்டர் இதுதான்...எதுவும் அவர்கிட்ட மாறாது!! குருவி பட நடிகை TK கலா உருக்கம்...
விஜய் முதலமைச்சராக பதவியேற்றப்பின் அவரை சந்திக்க குருவி படத்தின் அவருக்கு அம்மாவாக நடித்த நடிகை டி. கே. கலா அலுவலகத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவரை சந்திக்க முடியவில்லை என்று கண்கலங்கியபடி பேட்டி கொடுத்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. சமீபத்தில் அது குறித்து பேட்டியொன்றில் விளக்கம் கொடுத்துள்ளார் கலா.

TK கலா
அதில், நான் அன்னைக்கு அழவில்லை, அவரை பார்க்கவில்லை என்ற ஆதங்கத்தில் தான் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் அன்னைக்கு ஆபிஸில் இல்லை, அதனால்தான் அவரை பார்க்க முடியவில்லை.
அதுபோல், விஜய் முதலமைச்சர் ஆனதும் எனக்கு ரொம்ப சந்தோஷம், நான் ஓட்டு போடப்போவது பற்றி எனக்கு கனடாவிலிருந்த என் 9 வயது பேரன், நீங்க விஜய் மாமாவுக்கு தான் ஓட்டுப்போடணும் என்று சொன்னான். இங்கு இருக்கிற குழந்தைகள் விஜய்க்கு ஒட்டுப்போட சொல்லி சொல்லுவதுகூட ஓகேனு சொல்லலாம், ஆனால் கனடாவில் இருக்கும், ஆனால் கனடாவில் இருக்கும் என் பேரனும் நீங்க விஜய் மாமாவுக்குத்தான் ஓட்டுப் போடணும்னு சொன்னான்.
அதுபோல் நான் விஜய்யுடன் படங்களில் நடித்திருக்கிறேன், அவர் எப்போதும் வழவழன்னு பேசிட்டு இருக்கமாட்டார். ஷூட்டிங்கில் சரியாக இருப்பாரு, எந்த நேரத்தில் அவர் வரணுமோ அப்போ வருவாரு, அவர் அந்த ஷூட்டிங் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது, ஆனால் அவருடைய காட்சிகள் எல்லாம் சரியாக முடித்துவிடுவார். ஆனால் என்ன செய்யணும் என்பதில் கவனத்தில் வைத்திருப்பார்.

அதனால்தான் அவரால் இன்று இந்தளவிற்கு வர முடிகிறது, அவருடைய கேரக்டர் எப்போதுமே மாறாது என்று தெரிவித்துள்ளார். மேலும், விஜய் தீர்க்காயுசுடன் நல்ல உடல்நிலையுடன் இன்னும் பல ஆண்டுகள் ஆட்சி செய்யணும், அவர் கண்டிப்பாக தமிழ் மக்களுக்கு உதவுவார் என நம்புகிறேன்.
சமீபத்தில்கூட மேகதாது அணை பற்றிய பிரச்சனை வரும்போது தமிழ் மக்களுக்காக, எனக்கு அசிங்கம் வந்தாலும் பரவாயில்லை என்று சொன்னாரே, இதுபோல யாரு சொல்லுவா? யாரு செய்வா? ஆனால் விஜய் மக்களுக்காத்தான் எப்போதுமே உழைத்துக் கொண்டிருக்கிறார். நிறைய மக்களுக்காக யோசிக்கிறார், அதனால்தான் எனக்கு அவரை பார்க்க முடியலனு கொஞ்சம் வருத்தம் இருந்தது, மத்தபடி எந்த கோபமும் இல்லை என்று டி. கே. கலா தெரிவித்துள்ளார்.