அந்தமாதிரி காட்சியில் கோடியில் கொடுத்தாலும் மாட்டேன்! கோபக்கார நடிகை..

shakeela tamilactress silksmitha
By Jai Dec 05, 2021 05:38 AM GMT
Report

நூறு வருட தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் கவர்ச்சியாக நடித்த போதும் தன்னுடைய காந்த கண்களாலும், கவர்ச்சி பாவனையாளும், நடனத்தால் இன்றுவரை நம் நினைவில் இருப்பவர் சில்க். அவரைக் கவர்ச்சி நடிகை என்று கூறினாலும் இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் தனது நடிப்பு திறமையை காட்டியுள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் அவரது நடிப்பை எம் ஜி ஆர் பாராட்டியுள்ளார். அந்தக் காலத்தில் சில்க்கின் கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். தமிழில் நடிப்பதை விட மலையாளத் திரைப்படத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவாராம் சில்க்ஸ்மிதா.

அங்கு ஒரு திரைப்படத்திற்கான கால்ஷீட் மிகவும் குறைவு. அதனால் மலையாளத் திரைப்படத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். மலையாளத்தில் நடிகை ஷகிலாவை போல் இவரையும் அங்கு நடிக்க வைக்க எவ்வளவோ முயற்சிகள் நடைபெற்றது.

ஆனால் சில்க் அது போன்ற திரைப்படங்களில் நடிக்க மறுத்துவிட்டார். சில்க் ஸ்மிதா படத்திற்காக எவ்வளவு கவர்ச்சி வேண்டுமானாலும் காட்டுவேன். ஆனால் இது போன்ற திரைப்படங்களில் ஒரு போதும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

இதற்காக இவருக்கு அதிக சம்பளம் வழங்கப்படும் என்று கூறியும் அதையெல்லாம் காதில் கூட வாங்கவில்லை. ஏனென்றால் சிலுக்கு அவர்களுக்கு எப்போதும் பணத்தின் மீது ஆசை இல்லையாம்.