போனா வராது பொழுதுபோனா கிடைக்காது!! தங்கம் விலை Rs. 2000 குறைஞ்சிருக்காம்..
இந்த வார துவக்கத்தில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உச்சக்கட்ட அளவிற்கு அதிகரித்தது. இதனால் கடந்த 2 நாட்களாக தங்க முதலீட்டாளர்கள் தங்கத்தில் செய்திருந்த முதலீட்டை வார இறுதி நாட்களில் விற்பனை செய்து அதிக லாபத்தை ஈட்டினர்.
சந்தையில் தங்கம் வாங்குவோரின் டிமாண்ட் பெரியளவில் குறைந்த நிலையில் அந்த அதீத விற்பனை சந்தையில் தங்கம் விலையை குறைத்துள்ளது. எம்சிஎக்ஸ் சந்தியில் சுமார் 2000 ரூபாய் குறைந்து ரூ. 87, 785 ஆக விற்கப்பட்டது.
தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டாலும் நடப்பு ஆண்டின் தொடக்கத்திலிருந்து எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கத்தின் விலை 14 சதவீததிற்கும் மேல் லாபத்தை முதலீட்டார்களுக்கு கொடுத்திருக்கிறதாம்.
அந்தவகையில் இன்று இந்திய ரீடைல் சந்தையில் தங்கத்தின் விலை நேற்றைய வர்த்தகத்தை போலவே கிராமுக்கு 40 ரூபாய் வீதம் சரிந்து, 24 கேரட் - 10 கிராம் தங்கம் விலை 440 ரூபாய் குறைந்து 89,780 ரூபாயாக நகைக்கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுவே 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை 400 ரூபா குறைந்து 82,300 ரூபாக குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம்விலை 320 ரூபாய் குறைந்து 65,840 ரூபாயாக குறைந்துள்ளது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6795க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் தங்கத்தை வாங்குவோருக்கு இது ஒரு நல்ல நாளாக இருக்கும் என்று கூறப்படுகிறது.