பெரிய ஸ்டார் படங்கள் இல்லாத 2025 தீபாவளி!! இதுவரை மோதிக்கொண்ட வரலாறு யார் யார் தெரியுமா?
2025 தீபாவளி
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பொங்கல், தீபாவளி பண்டிகை வந்தாலே பெரிய ஸ்டார்களின் படங்கள் ரிலீஸாகி தல தீபாவளியை மக்கள் எல்லோரும் கொண்டாடுவார்கள்.
ஆனால், இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு பெரிய ஸ்டார்களின் படங்கள் ரிலீஸாகாமல் மூன்றாம் கட்ட ஸ்டார்களின் படங்கள் ரிலீஸாகி மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை குறைத்துள்ளது. அப்படி இதற்கு முன் தீபாவளி அன்று எந்தெந்த சூப்பர் ஸ்டார் படங்கள் மோதிக்கண்டன என்பதை பார்ப்போம்.
மோதிக்கொண்ட வரலாறு
1944 அக்டோபர் 16 தேதி தீபாவளிக்கு எம் கே தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் படமும், சி யு சின்னப்பா நடித்த மகாமாயா படம் ஒரே நாளில் போதியது. ஹரிதாஸ் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து சென்னையில் 2 ஆண்டுகள் ஓடியது.
1952 அக்டோபர் 1 ஆம் தேதி மு. கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி பட ரிலீஸானது.
இந்த இடைவெளியில் எம் ஜி ஆரின் படங்களும் தீபாவளிக்கு வெளியானது. அதில் 1960ல் எம் ஜி ஆரின் மன்னாதி மன்னன் வெளியாக, அதேநாளில் சிவாஜி கணேசனின் பெற்ற மனம், பாவை விளக்கு படங்கள் போட்டியாக வெளியானது. மன்னாதி மன்னன் வெற்றியடைந்தது.
1964ல் எம் ஜி ஆரின் படகோட்டி-யும் சிவாஜி கணேசனின் நவராத்திரி படமும் வெளியாகி இரு படமும் வெற்றியை பெற்றன.
1980ல் ரஜினி - கமல் படங்கள் தீபாவளிக்கு ரிலீஸானது. 1983ல் ரஜினியின் தங்க மகன் படமும் கமலின் தூங்காதே தம்பி தூங்காதே படமும் சிவாஜியின் வெள்ளை ரோஜா படமும் ரிலிஸானது.
1984ல் ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் படமும் கமலின் எனக்குள் ஒருவன் படமும் வெளியானது. 1985ல் ரஜினியின் படிக்காதவன் - கமலின் ஜப்பானில் கல்யாணராமன் படமும் வெளியானது.
பின் மாவீரன் - புன்னகை மன்னன், நாயகன் - மனிதன், மாப்பிள்ளை - வெற்றி விழா போன்ற ரஜினி - கமல் படங்கள் தீபாவளிக்கு மோதின.
1992ல் பாண்டியன் - தேவன் படங்களும் 1995ல் முத்து - குருதிப்புனல் படங்களும் தீபாவளிக்கு மோதின.
அதேபோல் விஜய் - அஜித் ஒருவரும் எதிர் துருவங்களாக உருவெடுத்தனர்.
விஜய் - அஜித்
அப்படி 2002ல் விஜய்யின் பகவதி - அஜித்தின் வில்லன் படங்கள் தீபாவளிக்கு மோதின.
2003ல் திருமலை - ஆஞ்சநேயா மோதின. அதேபோல் சூர்யா, விக்ரம் நடித்த பிதாமகனும் ரிலீஸானது. இதன்பின் விஜய் படங்கள் தீபாவளிக்கு ரிலீஸாகினாலும் அஜித் படங்கள் வெவ்வேறு தருணங்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது 2025 தீபாவளியை முன்னிட்டு டீசல், டியூட், பைசன் உள்ளிட்ட 5 படங்கள் மோதியுள்ளது.