16 வயது தான் இருக்கும், நகுல் என்ன டார்ச்சர் செய்தார்.. சுனைனா ஓபன் டாக்!!

Nakul Sunaina Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan May 12, 2024 09:57 AM GMT
Report

நகுல் நடிப்பில் 2008 -ம் ஆண்டு வெளியான "காதலில் விழுந்தேன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுனைனா.

இப்படத்தை தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர் பறவை, சில்லுக் கருப்பட்டி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்திருக்கும் சுனைனா, தமிழின் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

16 வயது தான் இருக்கும், நகுல் என்ன டார்ச்சர் செய்தார்.. சுனைனா ஓபன் டாக்!! | Tortured Actress Sunaina

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய சுனைனா, மாசிலாமணி, காதலில் விழுந்தேன் போன்ற படங்களில் நடிக்கும் போது எனக்கு வயது வெறும் 16 தான் இருக்கும். அப்போதெல்லாம் எனக்கு தமிழ் தெரியாது. மிகவும் அமைதியாகவே இருப்பேன்.

அந்த படங்களில் நடிக்கும் போது ஷூட்டிங் ஸ்பாட்டில். நகுல் என்னிடம் வந்து பேசிக்கொண்டே இருப்பார். நான் மௌனம் கலைத்துவிட்டு கலகலவென பேசவேண்டும் என்பது தான் அவருடைய எண்ணம். ஆனால் அவர் அவர் Irritate செய்தார் என்று சொல்லமுடியாது என்று சுனைனா கூறியுள்ளார்.  

You May Like This Video