செல்வாக்கு, பணபலம் கொண்ட யஷ்!! டாக்சிக் பட நெகட்டிவ் விமர்சனம் சொன்ன பிரசாந்த் பதிவு..

Youtube Yash Gossip Today Toxic
By Jai Aug 28, 2026 02:15 PM GMT
Report

டாக்சிக் நெகட்டிவ்

இயக்குநர் கீது மோகன்தாஸ் - யஷ் கூட்டணியில் உருவாகி ஆகஸ்ட் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸான படம் தான் டாக்சிக். நயன் தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், தாரா, ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது டாக்சிக் படம்.

செல்வாக்கு, பணபலம் கொண்ட யஷ்!! டாக்சிக் பட நெகட்டிவ் விமர்சனம் சொன்ன பிரசாந்த் பதிவு.. | Toxic Review Controversy Yash Send Legal Notice

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ரிலீஸான இப்படத்தினை பார்த்த ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

அதிலும் சினிமா விமர்சகர் பிரசாந்த், தன்னுடைய விமர்சனத்தை யூடியூப்பில் டாக்சிக் முறுகல் ரோஸ்ட் என்ற பெயரில் பேசியும், படத்தை மோசமாக விமர்சித்து, கீது மோகன்தாஸ், யஷ் என யாரையுமே அவர் விட்டுவைக்காமல் பேசியுள்ளார்.

மேலும் பெண்கள் கதாபாத்திரத்திடம் ஹீரோ யஷ் நடந்துகொள்ளும் விதத்தையும் விளாசியிருந்தார்.

செல்வாக்கு, பணபலம் கொண்ட யஷ்!! டாக்சிக் பட நெகட்டிவ் விமர்சனம் சொன்ன பிரசாந்த் பதிவு.. | Toxic Review Controversy Yash Send Legal Notice

நோட்டீஸ்

இந்நிலையில் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்த பிரசாந்த் உட்பட பல நெகட்டிவ் விமர்சனம் செய்த சினிமா விமர்சகர்களுக்கு யஷ் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் நிறுவனமும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.

இதுகுறித்து பிரசாந்த் எக்ஸ் பக்கத்தில், 'டாக்சிக் படத்தை விமர்சனம் செய்ததற்காக யஷ் மற்றும் KVN நிறுவனம் தரப்பில் இருந்து எனக்கு சட்டபூர்வமான நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. நிஜ வாழ்க்கையிலும் யஷ் தைரியமானவராகவும் இருப்பார் என நினைத்தேன், ஆனால் அவரும் செல்வாக்கும் பண பலமும் கொண்ட இன்னொரு நபர்தான் போல என்று கூறியிருக்கிறார்.