40 வயதாகியும் இப்படியொரு அழகு!! கோடியில் புறண்ட திரிஷாவின் சொத்துமதிப்பு இத்தனை கோடியா!!
மிஸ் சென்னை பட்டத்தை பெற்று ஜோடி படத்தில் கதாநாயகியின் தோழியான நடித்து சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார் நடிகை திரிஷா. பின் சூர்யாவின் மெளனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.
20 வருட சினிமா வாழ்க்கையில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த திரிஷா காதல் தோல்வி, தொழிலதிபருடன் நின்றுபோன திருமணம் என பல பிரச்சனைகளை சந்தித்து மார்க்கெட் இழந்தார்.
அதன்பின் 96 படத்தின் மூலம் தன் இடத்தினை மீண்டும் பிடித்தார். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் திரிஷா. தற்போது திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது. ஒரு படத்திற்காக 3 கோடி அளவில் சம்பளம் வாங்கி வரும் திரிஷா பொன்னியின் செல்வன் படத்திற்காக 5.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.
அப்படியென்றால் திரிஷாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 82 கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னைவில் தனியான ஒரு பங்களா மற்றும் விலையுயர்ந்த கார் உள்ளிட்டவை இருக்கிறது. மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து காசும் சம்பாதித்து வருகிறார் திரிஷா.